ரசகுல்லா என நினைத்து வாயில் வைத்த நாட்டு வெடிகுண்டு… வெடித்துச் சிதறி இளைஞர் பலி!

 

 

மத்தியப் பிரதேசத்தில் ரசகுல்லா எனக் கூறி கொடுக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டைக் கடித்த இளைஞர், அது வெடித்ததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

allowfullscreen

மத்தியப் பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டம் படாரியா கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திர பரோட்டியா (35). கடந்த நவம்பர் 10-ம் தேதி இரவு தனது வீட்டின் முற்றத்தில் குடும்பத்தினருடன் அமர்ந்திருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராம்பகத் பரோட்டியா என்பவர் அங்கு வந்துள்ளார்.

இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது, ராம்பகத் ஒரு உருண்டையான பொருளை ராஜேந்திரனிடம் கொடுத்து, அது ரசகுல்லா எனக் கூறியதாகத் தெரிகிறது. இதனை இனிப்பு என நம்பிய ராஜேந்திரன் வாயில் வைத்து கடித்துள்ளார். அப்போது அது பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் முகம் மற்றும் தாடைப் பகுதியில் பலத்த காயமடைந்த அவரை குடும்பத்தினர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ராம்பகத் பரோட்டியாவை கைது செய்துள்ளனர். வெடிகுண்டை அவருக்கு வழங்கியதாகக் கூறப்படும் சிறுவனையும் பிடித்து விசாரித்து வருகின்றனர். காட்டுப்பன்றிகளை வேட்டையாடப் பயன்படுத்தப்படும் வெடிபொருள் எப்படி கிடைத்தது, இந்தச் சம்பவத்தின் பின்னணி என்ன என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.