3 இடங்களில் அடுத்தடுத்து கோர தீ விபத்துகள்… பச்சிளம் குழந்தை உட்பட 13 பேர் பலி... பகீர் வீடியோ!

 

 

மத்தியப் பிரதேசத்தில் தீபாவளி இரவில் அடுத்தடுத்து ஏற்பட்ட மூன்று தீ விபத்துகளில், இரண்டு மாதக் குழந்தை உட்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

allowfullscreen

சியோனி மாவட்டம் சப்பாரா நகரில் உள்ள மூன்றடுக்கு குடியிருப்பு மற்றும் வணிகக் கட்டடத்தில் இன்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். நான்கு பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதேபோல், கட்னி மாவட்டம் பர்ஹி நகரில் நள்ளிரவில் மூன்றடுக்கு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 77 வயது முதியவர், அவரது மனைவி, மருமகள், இரண்டு சிறுமிகள் மற்றும் இரண்டு மாதக் குழந்தை ஆகியோர் அடங்குவர்.

உஜ்ஜைன் மாவட்டம் நாக்ஜிரி பகுதியில் தீபாவளி இரவு கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில், மேல்தளத்தில் சிக்கியிருந்த குடும்பத்தினர் மீட்கப்பட்டனர். இருப்பினும், 107 வயதான முதியவர் ஒருவர் புகை மூட்டத்தில் சிக்கி உயிரிழந்தார்.மூன்று சம்பவங்களிலும் சேர்த்து 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தீ விபத்துகளுக்கான காரணங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.