undefined

மதிமுக பொதுச்செயலர் வைகோ திடீர் மருத்துவமனையில் அனுமதி... தொண்டர்கள் அதிர்ச்சி!

 


 
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திடீரென சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு ஏற்கனவே வலது கை தோள்பட்டையில் அறுவைசிகிச்சை செய்து வைக்கப்பட்டிருக்கும் பிளேட்டை அகற்ற வேண்டும். இதற்காக, இன்று காலை வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


மே மாதம், வீட்டில் வழுக்கி விழுந்ததில், வைகோவுக்கு வலதுகை தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால்  அவருக்கு தோள்பட்டையில் எலும்புகள் கூட பிளேட் வைத்து அறுவைசிகிச்சை செய்யப்பட்டது.


தற்போது தோள்பட்டையில் எலும்பு கூடிவிட்டதால்  பிளேட்டை அறுவைசிகிச்சை செய்து எடுத்துவிடவேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். இதன்படி  வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.