லாக்கப் டெத்... கணவர் மரணத்திற்கு நீதி வேண்டும்... மனைவி கதறல்! 

 

 

மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணத்தில் உரிய விசாரணை நடத்தி நீதி வழங்க வேண்டும் என அவரது மனைவி சுதா கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து கண்ணீர் மல்க பேசிய அவர், “எனது கணவர் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழையல்ல. எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். எதற்காக எனது கணவரை காவல் நிலையத்தில் வைத்திருந்தீர்கள்? அவர் எதற்காக அங்கு இருக்க வைக்கப்பட்டார்? இதற்கு உரிய பதில் அளிக்க வேண்டும். எனது கணவரின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

பாலகிருஷ்ணனின் மரணம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள அவரது மனைவி, சம்பவத்தின் பின்னணி குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.