மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 4 நாட்களுக்கு அனைத்து கட்டண தரிசனங்களும் ரத்து!

 

 

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெறவுள்ள குடமுழுக்கு விழாவைக் முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காகக் கட்டண தரிசனம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோயிலில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற உள்ளதால், வரும் 17-ஆம் தேதி முதல் தொடர்ந்து 4 நாட்களுக்குக் கட்டண தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இந்நாட்களில் கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் எந்தவிதக் கட்டணமும் இன்றி இலவசமாகவே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

குடமுழுக்கு விழாவில் எதிர்பார்க்கப்படும் மாபெரும் கூட்ட நெரிசலில் குழந்தைகள் காணாமல் போவதைத் தவிர்க்கும் பொருட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் குழந்தைகளின் கைகளில் பெற்றோரின் பெயர் மற்றும் முகவரி விவரங்கள் அடங்கிய அடையாள சீட்டு இணைக்கச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.