மதுரை தனிஷ்க் கொள்ளை வழக்கில் இன்ஸ்டா பிரபலம் கைது? 5 கிலோ நகைகள் மீட்பு!

 

 

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் போலீசாரின் விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த வழக்கில் திருப்பாலை பகுதியைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சி மற்றும் பட்டதாரி இளைஞரின் தந்தை சுரேஷ் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

allowfullscreen

மேலும், இவர்களிடமிருந்து சுமார் 5 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் முக்கியமாகத் தேடப்பட்டு வரும் நிஷாந்த் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதாகத் தெரிகிறது.

அவரைப் பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். ஏற்கனவே நிஷாந்தின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியதுடன், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளைப் பதுக்கியிருக்கக்கூடிய இடங்களிலும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் முழுமையாக மீட்கப்படுமா, தலைமறைவாக உள்ள நிஷாந்த் எப்போது பிடிபடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.