மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் - இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

 

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. சார்பில் பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சுகந்தி மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் உள்ளிட்ட 48 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இவர்களில் பரிசீலனைக்குப் பிறகு 28 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் த.வெ.க. சார்பில் சத்தியபாமா, தி.மு.க. சார்பில் சுகன்யா, அ.தி.மு.க. சார்பில் பானுமதி, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் லட்சுமணன் உள்பட மொத்தம் 51 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றில் 22 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு, மீதமுள்ள 29 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

மனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாளாக உள்ள நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது. வரும் அக்டோபர் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஏற்கனவே வேட்பாளர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால், இறுதிப் பட்டியல் வெளியீட்டுக்குப் பின் தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.