மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் - சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

 

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி, வாக்காளர்கள் மற்றும் பொதுமக்கள் எவ்விதத் தடையுமின்றி எளிதாக வந்து செல்ல ஏதுவாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டம் சார்பில் இன்று 85 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தாம்பரத்தில் இருந்து 22 நடைகள், சூணாம்பேடு: 13 நடைகள், செய்யூர்: 13 நடைகள், திண்டிவனம்: 10 நடைகள், பவஞ்சூர்: 7 நடைகள், செங்கல்பட்டு: 5 நடைகள், மரக்காணம் வழியாக புதுச்சேரி: 5 நடைகள், மரகக்காணம் (தனியாக): 4 நடைகள், திண்டிவனம் வழியாக புதுச்சேரி: 3 நடைகள், காஞ்சிபுரம்: 3 நடைகள் என மொத்தம் 85 பேருந்து நடைகள் இயக்கப்படுகின்றன.

பொதுமக்கள் மற்றும் வாக்காளர்களின் அடர்வு மிகுந்த பகுதிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்து நடைகளும் இயக்கப்படும் என விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

இன்று காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற உள்ள நிலையில், மக்களின் போக்குவரத்து வசதிக்காக இந்தச் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.