பிரயாக்ராஜில் ஆன்மிகத்தின் கும்பமேளா பெங்களூருவில் விமானப் படையின் மகா கும்பமேளா... ராஜ்நாத் சிங் பெருமிதம்!
இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவில் ஏரோ இந்தியா - 2025 விமான சாகச நிகழ்ச்சி மற்றும் கண்காட்சி இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இதனை இன்று பிப்ரவரி 10ம் தேதி திங்கட்கிழமை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.
இந்த கண்காட்சியில் வெளிநாடுகளைச் சோ்ந்த 150 நிறுவனங்கள் உட்பட 900க்கும் மேற்பட்ட விமானத் தொழில் நிறுவனங்கள் பங்கேற்கும் இந்நிகழ்ச்சி பிப்ரவரி 14ம் தேதி வரை நடைபெறுகிறது.
2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த நிகழ்ச்சியை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பாதுகாப்பு உற்பத்தி துறையின் பாதுகாப்பு கண்காட்சி நிறுவனம் நடத்துகிறது. வரலாற்றில் முதல்முறையாக இந்நிகழ்ச்சியில் ஐந்தாம் தலைமுறை போா் விமானங்களான ரஷியாவின் எஸ்யு-57 மற்றும் அமெரிக்காவின் எஃப்-35 ஆகியவை கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடங்கி வைத்து பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், "நிச்சயமற்ற இவ்வுலகில் இந்திய மண்ணின் வலிமையையும் மீள்திறனையும் இந்நிகழ்ச்சி வெளிப்படுத்துவதால் இது மகா கும்பமேளாவைப் போன்றது." எனக் கூறியுள்ளார்.
"இந்தியாவில் ஒரு புறம் மகா கும்பமேளாவும் ஏரோ இந்தியா வடிவில் மற்றொரு கும்பமேளாவும் நடைபெற்று வருகிறது. பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் சுயமரியாதை கும்பமேளா ஒரு பக்கம், ஏரோ இந்தியாவின் ஆராய்ச்சி கும்பமேளா மறுபக்கம். பிரயாக்ராஜ் கும்பமேளா உட்புறத்தை வலுப்படுத்தவதில் கவனம் செலுத்துகிறது, ஏரோ இந்தியா கும்பமேளா வெளிப்புறத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
பிரயாக்ராஜ் இந்தியாவின் கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் வெளிபடுத்துகிறது, ஏரோ இந்தியா இந்தியாவின் சக்தியை வெளிப்படுத்துகிறது. ஒரு புறம் பாரம்பரியம், ஆன்மிகத்தின் மகாகும்பமேளா, மறுபுறம் ஆயுதம் மற்றும் தைரியத்தின் மகா கும்பமேளா நடைபெறுகிறது." என கூறியுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!