பாஜக கவுன்சிலர் மகன்  ஓட்டிய கார் மோதி கணவன், மனைவி பலி... பகீர் சிசிடிவி காட்சிகள்!

 

 

மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் கடந்த நவம்பர் 20-ஆம் தேதி பிற்பகல், பிரகலாத் கெய்க்வாட் மற்றும் அவரது மனைவி சுனிதா கெய்க்வாட் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த கார், அவர்கள் சென்ற வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் பிரகலாத் கெய்க்வாட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சுனிதா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

பாஜக மாமன்ற உறுப்பினர் தீபக் மெண்ட்கேவின் மைனர் மகன் தக்ஷ் மெண்ட்கே காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உயிரிழந்த தம்பதியின் பிள்ளைகள் அளித்த புகாரின் அடிப்படையில், சிறுவன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.