தானேயில் கொடூரம்: விருந்துக்கு அழைத்துச் சென்று மது கொடுத்து சிறுமி கூட்டுப் பலாத்காரம் !
கட்டுரை: மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் காஷிகாவ் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை, அவரது தோழி சீத்தல் (25) விருந்து நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார். இருவரும் மிரா ரோடு வினய்நகர் பகுதியில் உள்ள வீட்டுக்குச் சென்றுள்ளனர்.
அங்கு சீத்தலின் நண்பர்களான பியூஷ், துஷ்யந்த், ஆகாத் கான் ஆகியோர் இருந்துள்ளனர். விருந்தில் அவர்கள் சிறுமியைக் கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்ததாகவும், பின்னர் சீத்தலும் பியூசும் வெளியே சென்ற நிலையில் ஆகாத் கான் மற்றும் துஷ்யந்த் ஆகியோர் சிறுமியைக் கூட்டுப் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
சிறுமியைக் காணாமல் பெற்றோர் போலீசில் புகார் அளித்திருந்த நிலையில், மறுநாள் காலை வீடு திரும்பிய சிறுமி தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்துக் கூறியுள்ளார். இதையடுத்து காஷிகாவ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.செல்போன்களை அணைத்து வைத்துவிட்டுத் தலைமறைவாகியுள்ள தோழி சீத்தல் உள்பட 4 பேரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.