திரிணாமுல் எம்.பி. மஹூவா மொய்த்ரா கார் மீது முட்டை, கற்கள் வீச்சு... பரபரப்பு வீடியோ!
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ராவின் கார் மற்றும் கான்வாய் மீது முட்டைகள், கற்கள் வீசப்பட்டதுடன், கம்புகளால் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கிருஷ்ணாநகர் தொகுதி எம்.பி.யான மஹூவா மொய்த்ரா, நதியா மாவட்டம் காளிகஞ்ச் பகுதியில் உள்ள கோப்ரா கிராமப் பஞ்சாயத்துக்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அப்போது பாஜக கொடிகளுடன் திரண்டிருந்த போராட்டக்காரர்கள் அவரது வாகனத்தை முற்றுகையிட்டு, முட்டைகள் மற்றும் கற்களை வீசியதாகக் கூறப்படுகிறது.
சுமார் 80 முதல் 90 பேர் தாக்குதல் நடத்துவதற்காக முன்கூட்டியே திரண்டிருந்ததாக மஹூவா மொய்த்ரா தெரிவித்துள்ளார். மேலும், தனக்குப் பாதுகாப்பு அளிக்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தச் சம்பவத்தை அவர் சமூக வலைதளத்தில் நேரலையாகப் பகிர்ந்துள்ளார். இதற்கிடையே, போராட்டம் பொதுமக்களின் எதிர்ப்பின் வெளிப்பாடு என பாஜக நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். மஹூவாவின் குற்றச்சாட்டுகள் குறித்து போலீசார் தரப்பில் உடனடி பதில் வெளியாகவில்லை