இதப் பார்றா...!! தாத்தா பாட்டிக்கு சிலை வைத்து, கோவில் கட்டி கும்பாபிஷேகம்!!

 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்  அருகேயுள்ள அத்திமரத்து குட்டை கிராமத்தில் வசித்து வருபவர்   பூசாரி அய்யமுத்து. இவரது மனைவி ஐயம்மாள். இவர் இதே பகுதியில் உள்ள  இருசாயி கோவில் பூசாரியாக பல ஆண்டுகள் பணி செய்து வருகிறார். அத்துடன் பொது மக்களுக்கு அருள் வாக்கும் சொல்லி வருகிறார்.   இதில் ஐயம்மாள் டிசம்பர் 22, 2020ல் காலமானார். இவரை  தொடர்ந்து  ஆகஸ்ட் 12, 2022ல் ஐயமுத்துவும் காலமானார்.

இதில் ஐயமுத்து தான் உயிருடன் இருக்கும் போதே தான் இறந்தபிறகு சொந்த நிலத்தில் தான் தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என கூறிவந்தார். ஆனால்  சந்தர்ப்ப சூழ்நிலையால் இடுகாட்டில் அடக்கம் செய்துவிட்டனர்.   கடந்த ஓர் ஆண்டாகவே பூசாரியின் ஆன்மா சாந்தி அடையவில்லை என்பதை  உறவினர்களுக்கு கனவில் உணர்த்தி கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. இதனால்  அவர்  உயிருடன் இருக்கும் போது எங்கு அடக்கம் செய்ய வேண்டும் என கூறினாரோ, அதே இடத்தில் ஐயமுத்து - ஐயமாலுக்கு சிலை வைக்க முடிவு செய்தனர். அதன்படியே இருவருக்கும் சிலை வைத்து கோவில் கட்டி கும்பாபிஷேகமும்  நடத்தினர்.


பூசாரி ஐயமுத்துவின் முதலாம் ஆண்டு நினைவு நாளில்  ஐயமுத்து - ஐயம்மாளின் கோவில் முன்பாக, வேம்பரசு மரத்தின் அடியில் விநாயகர் சிலை வைத்து மகா கும்பாபிஷேகம் விழாவை வெகு விமரிசையாக நடத்தி முடித்தனர். இதனைத் தொடர்ந்து இருவரின்   சிலைகளுக்கும்  சிறப்பு பூஜைகள் , வழிபாடுகள் செய்யப்பட்டன.  சேலம் மாவட்டம், தம்பம்பட்டியைச் சேர்ந்த சிலை சிற்பி அருண்குமார் முதல் முறையாக பூசாரி ஐயமுத்து - ஐயம்மாள் தம்பதிக்கு சிலை வடித்துள்ளார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!