மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு - 4 பேர் கைது!
Nov 29, 2026, 20:00 IST
சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி ஆண் யானை ஒன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, வனத்துறையினர் 4 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராய்கர் மாவட்டம், தரம்ஜெய்கர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பரதாபாலி கிராமத்தின் 437-வது வனப்பகுதியில் ஆண் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
வனத்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக மர்ம நபர்கள் வயலில் சட்டவிரோதமாக மின்சாரக் கம்பி அமைத்திருந்ததும், அதில் சிக்கி யானை உயிரிழந்ததும் தெரியவந்தது.
வனவிலங்குகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் சட்டவிரோத மின்வேலி அமைத்த விவகாரம் தொடர்பாக 4 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.