மாலியில் பயங்கரவாதிகளிடம் சிக்கிய 82 ராணுவ வீரர்கள் விடுவிப்பு!
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில், கிளர்ச்சியாளர்கள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்த 82 ராணுவ வீரர்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளதாக மாலி ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பமாகோ உட்படப் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற தாக்குதல்களின் போது கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டு 3 மாதங்களுக்கும் மேலாகப் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த 82 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.
மாலி ராணுவத்தின் துல்லியமான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைந்த இராணுவ நடவடிக்கை காரணமாகவே இந்த மீட்பு சாத்தியமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
80-க்கும் மேற்பட்ட வீரர்கள் மீட்கப்பட்டுள்ள போதிலும், இன்னும் 100-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகள் மற்றும் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருப்பதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். மாலியில் 2021-ஆம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்த ரஷ்யாவின் ஆதரவுடன் மாலி ராணுவம் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராகத் தீவிரத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.