ஃப்ரீயா ஊர் சுத்தலாம் வாங்க... நாளை மாமல்லபுரம்   இலவச அனுமதி!

 

 

உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை நாளை (நவம்பர் 19) ஒருநாள் மட்டும் இலவசமாகச் சுற்றிப் பார்க்கலாம் என தொல்லியல்துறை அறிவித்துள்ளது.

மத்திய தொல்லியல்துறை சார்பில் ஆண்டுதோறும் நவம்பர் 19 முதல் 25ஆம் தேதி வரை உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மாமல்லபுரத்தில் நாளை அர்ஜுனன் தபசு எதிரே ஓவியப் போட்டியுடன் கொண்டாட்டங்கள் தொடங்குகின்றன.

இதன் ஒரு பகுதியாக, மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணெய் உருண்டைக்கல் பாறை, புலிக்குகை உள்ளிட்ட புராதன சின்னங்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாளை கட்டணமின்றிப் பார்வையிடலாம்.வழக்கமாக நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை இலவசமாகக் காண சுற்றுலாப் பயணிகளுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது