டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மது விற்பனை- ஒருவர் கைது; மேற்பார்வையாளர் தலைமறைவு!

 

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் கூடுதலாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் டாஸ்மாக் கடையில் அரசு விலையை மீறி கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாகக் கிடைத்த புகாரின் அடிப்படையில் போலீசார் அதிரடி விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த டாஸ்மாக் கடையில் பணிபுரியும் முறையான ஊழியர் அல்லாத ஒரு நபர் மது விற்பனையில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவரைப் போலீசார் கைது செய்தனர்.

முறையான அனுமதி மற்றும் பணியாளர் நியமனம் இன்றி, அந்த நபரை டாஸ்மாக் கடையில் பணியமர்த்திய தொடர்புடைய கடையின் மேற்பார்வையாளரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.