ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து மிரட்டிய நண்பனை அம்மிக்கல்லால் அடித்துக் கொன்ற இளைஞர்!
திருப்பூரில் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து, தனிப்பட்ட வீடியோவைக் காட்டி மிரட்டிய நண்பனை இளைஞர் ஒருவர் அம்மிக்கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் தனது மனைவியுடன் தனி அறையில் தங்கி வேலை பார்த்து வந்தவர் முத்து. இவருடன் பழகி வந்த நண்பர் சின்ராம் என்பவர், முத்துவை ஓரினச்சேர்க்கைக்கு வருமாறு வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. அதற்கு முத்து மறுத்த நிலையில், முத்துவின் தனிப்பட்ட சில வீடியோக்களை வைத்திருந்த சின்ராம், அதை அவரது மனைவியிடம் காட்டி விடுவதாகக் கூறித் தொடர் மிரட்டல் விடுத்துள்ளார்.
சின்ராமின் இந்தத் தொடர் மிரட்டலால் கடும் ஆத்திரமடைந்த முத்து, வீட்டில் இருந்த அம்மிக்கல்லை எடுத்துச் சின்ராமின் தலையில் பலமாக வீசித் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சின்ராம் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
கொலைச் சம்பவத்தை அரங்கேற்றிய பிறகு முத்து அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகிவிட்டார். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த காவல்துறையினர், சின்ராமின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோடிய முத்துவைக் கைது செய்ய வழக்குப் பதிவு செய்து தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.