undefined

 புறா முட்டை எடுக்க கிணற்றில் இறங்கிய இளைஞர் நீரில் மூழ்கி பலி... தந்தை, தம்பி மீட்பு!

 
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே புறா முட்டை எடுக்க கிணற்றில் இறங்கிய இளைஞர் தவறி கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவரை மீட்க சென்று கிணற்றில் தவித்த தந்தை, தம்பியை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பழனியப்பபுரத்தைச் சேர்ந்தவர் பால்பாண்டி (55). கூலித் தொழிலாளியான இவரது மகன்கள் செல்வகுமார் (31), தினேஷ்குமார் (28) என 3பேரும் அதே ஊரில் உள்ள யோசேப்பு என்பவரது தோட்டத்தில் வேலைக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் தோட்டத்தில் இருந்த கிணற்றில் செல்வகுமார் இறங்கி அங்கிருந்த பொந்தில் புறா முட்டையை எடுக்க செல்வகுமார் முயன்றுள்ளார். 

அப்போது எதிர்பாராத விதமாக செல்வகுமார் கிணற்றினுள் தவறி விழுந்தார். அதில் காயமடைந்த அவர் கிணற்றில் உள்ள தண்ணீரில் முழ்கினார். உடன் அருகில் நின்றுக் கொண்டிருந்த செல்வகுமாரின் தந்தை பால்பாண்டி, அவரது தம்பி தினேஷ்குமார் ஆகியோரும் கிணற்றில் இறங்கி, மூழ்கிய செல்வகுமார் காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. இதனையடுத்து சாத்தான்குளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அதன்பேரில் நிலைய அலுவலர் இசக்கி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கிணற்றில் தத்தளித்து கொண்டிருந்த பால்பாண்டி, தினேஷ்குமாரை காப்பாற்றி மீட்டனர். தொடர்ந்து தண்ணீரில் மூழ்கிய செல்வகுமாரை தேடினர். அப்போது அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. 

செல்வகுமாரின் உடலை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) நாககுமாரி வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!