விஜய் வீட்டிற்குள் முகத்தை மூடிக்கொண்டு காரில் சென்ற நபரால் பரபரப்பு? குதிரை பேர அச்சத்தில் தமிழக அரசியல்!
தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான 118 என்ற மேஜிக் எண்ணை எட்ட தவெக தலைவர் விஜய் தீவிரமாகப் போராடி வரும் நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நடந்த ஒரு சம்பவம் பரபரப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
இன்று மதியம் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய் வீட்டிற்குள் 'இன்னோவா' கார் ஒன்று அதிவேகமாக நுழைந்தது. அந்த காரின் உள்ளே இருந்த நபர், தனது முகத்தை முழுவதுமாக மறைத்தபடி சென்றது அங்கிருந்த செய்தியாளர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.
தவெக-விற்கு இன்னும் சில எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படும் சூழலில், ரகசிய பேச்சுவார்த்தைக்காக வந்த மாற்றுக்கட்சியின் முக்கியப் புள்ளியா அல்லது முக்கியத் தகவல் ஏதேனும் கொண்டு வந்த அரசு அதிகாரியா என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.
தமிழகத்தில் தொங்கு சட்டப்பேரவை ஏற்பட்டுள்ளதால், எம்.எல்.ஏ-க்களைத் தக்கவைத்துக் கொள்ளவும், பிற கட்சியினரை ஈர்க்கவும் 'குதிரை பேரங்கள்' நடக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இத்தகையச் சூழலில், முகத்தை மறைத்துக் கொண்டு ஒரு நபர் விஜய்யைச் சந்திக்க வந்தது, ஏதோ ஒரு பெரிய அரசியல் திருப்பம் அரங்கேறப் போவதையே காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அந்த இன்னோவா கார் யாருடையது என்பது குறித்து காவல்துறையினர் மற்றும் ஆர்.டி.ஓ தரப்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிகிறது. அந்த நபர் திமுக கூட்டணியில் அதிருப்தியில் இருக்கும் ஒரு கட்சியின் மூத்த தலைவராக இருக்கலாம் என்றும் ஒரு தரப்பினர் கிசுகிசுக்கின்றனர். எது எப்படியோ, விஜய் வீட்டிற்குள் நுழைந்த அந்த 'மர்ம நபர்' யார் என்பது தான் தற்போதைய கோயம்பேடு முதல் கோட்டை வரை ஹாட் டாபிக்!