நீதிபதி போல நடித்து ஜாமின் பெற முயன்றவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை!
Aug 31, 2026, 20:15 IST
உச்ச நீதிமன்ற நீதிபதி போன்று தொலைபேசியில் பேசி ஜாமின் பெற முயன்ற மோசடி வழக்கில், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருக்கு டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டில் ஊழல் வழக்கு ஒன்றில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, சிறப்பு நீதிமன்ற நீதிபதியிடம் உச்ச நீதிமன்ற நீதிபதி பேசுவதாகக் கூறி, தனக்கு உடனடியாக ஜாமின் வழங்குமாறு சுகேஷ் சந்திரசேகர் மிரட்டலும் நிர்பந்தமும் விடுத்துள்ளார்.
இந்த மோசடி மற்றும் ஆள்மாறாட்ட வழக்கு குறித்து விசாரணை நடத்தி வந்த டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம், குற்றம் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அவருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.