மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொன்ற கணவர்! 3 குழந்தைகள் தவிப்பு – காவல் நிலையத்தில் சரண்
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே குடும்பத் தகராறில் மனைவியைக் கணவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், தாயை இழந்த அவர்கள் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எடப்பாடி அருகே வசித்து வந்த மணிகண்டன் விசைத்தறித் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி நந்தினி. சம்பவத்தன்று மணிகண்டன் மது அருந்திய நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து அவரிடம் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த மணிகண்டன் நந்தினியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதில் நந்தினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மனைவியைக் கொலை செய்த பின்னர் மணிகண்டன் காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து எடப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறு மற்றும் கொலைக்கான பின்னணி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்