இளம்பெண்ணைக் கொலை செய்து, 3 நாட்கள் சடலத்துடன் வீட்டிலேயே முடங்கியிருந்த நபர் - தேனியில் அதிர்ச்சி!

 

தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் வைக்கப்பட்டிருந்த வீட்டிற்குள்ளேயே மூன்று நாட்களாகத் தங்கியிருந்த நபரைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த அம்சவல்லி என்பவருக்கும் அப்துல் ரகுமான் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட பணத்தகராறில் கடுமையான வாக்குவாதம் முற்றியுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த அப்துல் ரகுமான், அம்சவல்லியைத் தாக்கித் தலையில் கல்லைப் போட்டுக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். மேலும், உடலை மறைப்பதற்காக அதனை மூட்டை கட்டி வைத்துள்ளார்.

allowfullscreen

கொலை செய்த பிறகு தப்பியோடாமல், கொலையுண்ட பெண்ணின் சடலத்துடன் அதே வீட்டிற்குள்ளேயே மூன்று நாட்களாக அப்துல் ரகுமான் தங்கியிருந்துள்ளார். வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர், வீட்டிற்குள் இருந்த சடலத்தைக் கைப்பற்றினர். மேலும், தலைமறைவாகாமல் வீட்டிலேயே முடங்கியிருந்த அப்துல் ரகுமானைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.