சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை!
Aug 31, 2026, 12:45 IST
டெல்லிக்கு அருகில் உள்ள நொய்டா பகுதியில் 6 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்த குற்றவாளி, காவல்துறையினரால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
நொய்டா புறநகர் பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளியைத் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர்.
குற்றவாளியைப் பிடித்துச் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியபோது, அவர் காவல்துறை அதிகாரிகளைத் தாக்கிவிட்டுத் தப்பியோட முயன்றார். இதனையடுத்துப் பாதுகாப்புக்காகக் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்த நபர் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் உயர் காவல்துறை அதிகாரிகள் விரைந்து சென்று நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.