தொகுதி மறுவரையறை மசோதா மிகப்பெரிய அரசியல் சதி - மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு!

 

மத்திய அரசு கொண்டுவர முயற்சிக்கும் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவானது, இந்தியாவின் இறையாண்மையையும் கூட்டாட்சி தத்துவத்தையும் கடுமையாகச் சீர்குலைக்கும் மிகப்பெரிய அரசியல் சதி என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

50% தொகுதி உயர்வு என்ற போர்வையில், மக்கள் தொகையைக் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய தமிழ்நாட்டிற்குத் துரோகம் இழைக்கும் வகையில் இந்த மசோதாவை மீண்டும் நிறைவேற்ற பாஜக அரசு முயல்வதாக அவர் விமர்சித்தார். இந்த நடைமுறையால் தென் மாநிலங்களின், குறிப்பாகத் தமிழ்நாட்டின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் மற்றும் குரல் வெகுவாகக் குறைக்கப்படும் என்று சுட்டிக்காட்டினார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்த மசோதாவிற்கு எதிராகவே வாக்களிப்பார்கள் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். தமிழ்நாட்டின் உரிமைகளையும் அரசியல் அதிகாரத்தையும் பறிக்க நினைக்கும் இந்த அநீதியை முறியடிக்க, அனைத்துத் தரப்பினரும் மற்றும் அனைத்துக் கட்சிகளும் ஒன்று திரண்டு போராட வேண்டும் என மாணிக்கம் தாகூர் அழைப்பு விடுத்துள்ளார்.