"தவெகவினர் இன்னமும் ரசிகர் மனநிலையிலேயே உள்ளனர்" - மாணிக்கம் தாகூர் கடும் விமர்சனம்!
தவெக மற்றும் அதன் தலைவர் விஜய் குறித்துக் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்த கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
"இன்றைய முதல்வர் விஜய், வருங்காலப் பிரதமர் விஜய்" எனக் கூறிவரும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இன்னமும் அரசியல் கட்சியினராக மாறாமல், வெறும் ரசிகர் மன்ற மனநிலையிலேயே இருந்து வருகிறார்கள் என மாணிக்கம் தாகூர் சாடியுள்ளார்.
"அத்தகைய ரசிகர் மனநிலையில் இருப்பவர்களின் சிந்தனையை உடனடியாக மாற்ற முடியாது. அவர்களின் அணுகுமுறையும், காங்கிரஸின் அரசியல் அணுகுமுறையும் முற்றிலும் வேறுபட்டவை" என்றும் அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது குறிப்பிட்டார்.
முன்னதாகப் பேட்டி ஒன்றில் பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி, "விஜய் அவர்கள் இன்றைக்குக் கட்சித் தலைவர்; நாளைய தமிழக முதல்வர்; வருங்காலப் பிரதமர்" என்று கருத்து தெரிவித்திருந்தார். இக்கூற்றுக்குக் பதிலடி கொடுக்கும் வகையிலேயே மாணிக்கம் தாகூர் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.