பெரம்பூரில் கிடந்த ஆண் சடலத்தின் தலை மீட்பு!

 

சென்னை பெரம்பூர் ரயில் நிலையப் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தலை துண்டிக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தனிப்படை போலீசார், கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த அந்த நபர் யார் என்பது குறித்தும், கொலையாளிகளைப் பிடித்தும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

போலீசாரின் தீவிர விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபர் அமீர் அலி என்பது தெரியவந்தது. அவரது நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக, அமீர் அலியின் மனைவி தனது ஆண் நண்பருடன் சேர்ந்து இந்தத் துணிகரக் கொலையைச் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த கொலையாளிகள் இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அமீர் அலியின் மனைவி மற்றும் அவரது ஆண் நண்பரிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், செங்கல்பட்டு பகுதியில் உள்ள ஏரியில் வீசப்பட்ட அமீர் அலியின் துண்டிக்கப்பட்ட தலையை போலீசார் நீண்ட தேடுதலுக்குப் பின் பத்திரமாக மீட்டனர்.