சட்டப்பேரவையில் அனல்  பேச்சு... ஒவ்வொருவர் தலையிலும் ரூ.1.28 லட்சம் கடன் என நிதியமைச்சர் மரிய வில்சன் பேச்சு!

 

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், நிதியமைச்சர் மரிய வில்சன் மற்றும் திமுக உறுப்பினர்களுக்கிடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. திமுக அரசு செயல்படுத்திய ஒவ்வொரு திட்டத்திலும் ஸ்டாலின் பெயர் இருப்பதாகக் கூறி அவர்கள் பெருமிதம் தெரிவித்த நிலையில், அமைச்சர் அதற்குத் தக்க பதிலடி கொடுத்துள்ளார். ஒவ்வொருவர் தலையிலும் திமுக அரசு வைத்துச் சென்ற ரூ.1,28,000 கடனில்தான் உங்கள் தலைவர் இருக்கிறார் என்று அவர் குறிப்பிட்டது பேரவையில் பெரும் அமளியை ஏற்படுத்தியது.

முன்னாள் அரசின் நிதி நிர்வாகம் மற்றும் கடன் சுமை குறித்து அமைச்சர் சுட்டிக்காட்டிய இந்தக் கருத்து திமுக உறுப்பினர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பைச் சம்பாதித்தது. அமைச்சரின் இந்த விமர்சனத்திற்கு உடனுக்குடன் எதிர்ப்புத் தெரிவித்த திமுக உறுப்பினர்கள் அவையில் கூச்சலிட்டுத் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர். இதனால் சட்டப்பேரவையின் மையப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியதுடன் உறுப்பினர்களின் தொடர் முழக்கங்களால் சலசலப்பு ஏற்பட்டது.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளையும் மீறித் தன் வாதத்தில் உறுதியாக இருந்த நிதியமைச்சர் மரிய வில்சன், முந்தைய ஆட்சியின் பொருளாதார நிலையைத் தொடர்ந்து விளக்கிப் பேசினார். மக்களின் மீது சுமத்தப்பட்டுள்ள நிதிச்சுமை மற்றும் மாநிலத்தின் தற்போதைய நிதிநிலை குறித்து விவாதிக்கப்பட்ட இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.