சேலையைப் பிடித்து இழுத்த மாப்பிள்ளையின் தம்பி...திருமணத்தை நிறுத்திய மணமகள் !

 

உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண விழாவில், மாப்பிள்ளை மற்றும் மணமகளின் குடும்பத்தினர் ஆடல் பாடல்களுடன் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது மாப்பிள்ளையின் தம்பி மணமகளின் சேலையின் நுனிப்பகுதியைப் பிடித்து இழுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த மணப்பெண், அந்த நபரைக் கண்டித்ததோடு, இது குறித்துத் தனது தாய் மாமாவிடம் கூறியுள்ளார். அவர் உடனடியாக மாப்பிள்ளையின் குடும்பத்தினரிடம் இது குறித்து வாக்குவாதம் செய்யத் தொடங்கினார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது.

allowfullscreen

திருமண வீட்டில் நடந்த இந்த மோதலின் போது மாப்பிள்ளையின் தலையில் காயம் ஏற்பட்டதுடன், மணப்பெண்ணும் தனக்கு இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை எனத் தெரிவித்தார். இதையடுத்து இந்த விவகாரம் காவல் நிலையத்திற்குச் சென்றதுடன், அங்கு போலீசார் இருதரப்பினரையும் அழைத்துச் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியில் இரு குடும்பத்தினரும் பேசிச் சமாதானம் அடைந்ததை அடுத்து, காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட்டன.

பின்னர் அன்றைய தினம் மாலையில் திட்டமிட்டபடியே அந்தத் திருமணம் மிகவும் சுமூகமாக நடத்தி முடிக்கப்பட்டது.திருமண வீட்டில் நடந்த இந்த அதிரடித் திருப்பங்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குடும்பத்தினரிடையே ஏற்பட்ட இந்த எதிர்பாராத மோதல் சிறிது நேரம் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், பின்னர் சுமூகமாக முடிந்தது குறிப்பிடத்தக்கது. சம்மந்தப்பட்டவர்களின் ஒத்துழைப்பால் பிரச்சனை உடனடியாகத் தீர்க்கப்பட்டுத் திருமணம் இனிதே நிறைவேறியது.