தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு தினம்... ராமநாதபுரத்தில் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட கலெக்டர் உத்தரவு!

 

தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 10 மற்றும் 11 ஆகிய இரு தினங்களிலும் டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்களை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அந்நாட்களில் விதிமுறைகளை மீறிச் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் பொருட்டும், பொது அமைதியைக் காக்கும் வகையிலும் இந்தத் தற்காலிக மதுக்கூட மூடலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தடையின் காரணமாகப் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்படுவதோடு, அனைத்துப் பகுதிகளிலும் வருவாய்த் துறையினரும் காவல்துறையினரும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

இந்த உத்தரவை மீறி யாராவது செயல்பட்டால் அவர்கள் மீது உரிய சட்ட விததிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மீண்டும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பையும் அமைதியையும் உறுதி செய்யும் இந்த நடவடிக்கைக்கு அப்பகுதி மக்களிடையே வரவேற்பு எழுந்துள்ளது.