மாஸ்... 17 ஆண்டுகளுக்கு பிறகு  2வது முறையாக  டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியா!  

 

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு பொற்கால தருணம் இன்றைய நாளில் அரங்கேறியது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 17 ஆண்டுகளுக்குப் பிறகு 2 வது முறையாக உலகக்கோப்பையைக் கைப்பற்றிப் புதிய வரலாறு படைத்தது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி கிடைத்து இன்றுடன்  2  ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

பார்படாஸில் நடைபெற்ற பரபரப்பான இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, விராட் கோலியின் அரைசதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. 177 ரன்கள் என்ற இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா, ஒரு கட்டத்தில் வெற்றி பெற்று விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டு தென் ஆப்பிரிக்காவை 169 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

இதற்கு முன்னதாக கடந்த 2007 ஆம் ஆண்டில் மகேந்திர சிங் தோனி தலைமையில் முதல் முறையாக டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்றிருந்தது. அதனைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிடைத்த இந்த இரண்டாவது உலகக்கோப்பை வெற்றி, இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் என்றும் அழியாத நினைவாக நிலைத்து நிற்கிறது. உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்த வரலாற்றுப் பெருமித தருணத்தை ரசிகர்கள் இன்று சமூக வலைத்தளங்களில் நினைவு கூர்ந்து கொண்டாடி வருகின்றனர்.