மாஸ்... இந்தியன் 3 பணிகள் விரைவில் ... .இயக்குநர் ஷங்கர் லேட்டஸ்ட் அப்டேட்!
இந்தியன் 3 பணிகள் விரைவில் தொடங்கப்படும் என இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.இத்தகவலால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். சமீபகாலமாக தொடர்ச்சியாக இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தொடர் தோல்வியை தழுவி வருகின்றன. குறிப்பாக, இந்தியன் 2 கடந்த ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படுதோல்வி அடைந்தது.
அது மட்டுமின்றி படத்தில் இடம்பெற்ற காட்சிகளும் கூட சமூக வலைத்தளங்களில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர் கம்பேக் கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்தினை இயக்கினார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. 450 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்பதால் இன்னும் பட்ஜெட் தொகையை வசூல் செய்யமுடியாமல் திணறி வருகிறது. தொடர்ச்சியாக இரண்டு தோல்வி படங்களை கொடுத்த காரணத்தால் பழையபடி ஹிட் படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இயக்குநர் ஷங்கர் உள்ளார்.
இதனையடுத்து ஷங்கர் தன்னுடைய அடுத்தப்படமான இந்தியன் 3-ஐ கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ”அடுத்ததாக இந்தியன் 3 படத்தின் வேலைகளை தொடங்க தான் திட்டமிட்டு இருக்கிறேன். இப்போது படத்தின் வேலைகளை தொடங்கினாள் இன்னும் 6 மாதங்களில் இந்தியன் 3 படத்தினை கொண்டு வந்துவிடலாம். ஏனென்றால், படத்தில் VFX வேலைகள் நிறையவே இருக்கிறது. எந்தெந்த காட்சிகளுக்கு எவ்வளவு நாள் VFX செய்வதற்கு நேரமாகும் என்பதை கேட்டுவிட்டு அதற்கான வேலைகளை தொடங்க திட்டமிட்டு இருக்கிறேன்” எனக் கூறியிருந்தார்.
மேலும், இரண்டாவது பாகம் வெளியானபோதே கடும் விமர்சனத்தை படம் சந்தித்த காரணத்தால் மூன்றாவது பாகம் ஓடிடி-யில் வெளியாகும் என தகவல்கள்கசிந்து இருந்தது. என்ன விமர்சனங்கள் வந்தாலும் கண்டிப்பாக மூன்றாவது படம் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்பதை ஷங்கரும் உறுதிப்படுத்தியிருந்தார். இந்த சூழலில், ஷங்கர் படத்தின் வேலைகளை தொடங்க திட்டமிட்டு இருப்பதாக கூறியுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!