மாஸ் வீடியோ...விடாமுயற்சி நடிகர் அஜித் கட்-அவுட்டுக்கு பீர் அபிஷேகம்!
இன்று நடிகர் அஜீத்குமாரின் விடாமுயற்சி படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் அந்த வகையில் புதுச்சேரியில் விடா முயற்சி வெளியான திரையரங்குகளில் ரசிகர்கள் அஜித்குமார் கட்அவுட் வைத்து பீர் மற்றும் பால் அபிஷேகம் செய்தனர். செண்டமேளம், பேண்டுவாத்தியம், நாதஸ்வரம் என இசையுடன் ஆட்டம், பாட்டம் என கொண்டாடினர்.
இன்று காலை 10.30 மணிக்கு ராஜா தியேட்டரில் திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த திரையரங்கில் அஜீத் ரசிகர்கள் அஜித்குமார் கட்அவுட் வைத்து பீர் மற்றும் பால் அபிஷேகம் செய்தனர். செண்டமேளம், பேண்டுவாத்தியம், நாதஸ்வரம் என இசையுடன் ஆட்டம், பாட்டம் என கொண்டாடினர். இதேபோல பாலாஜி, முருகா, ரத்னா உள்ளிட்ட பல திரையரங்குகளிலும் ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி திரைப்படத்தை வரவேற்றனர். தியேட்டரில் அஜித்குமார் அறிமுகமான காட்சியில் கலர் பேப்பர்களை வீசி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதேபோல் சென்னை அம்பத்தூரில் உள்ள ராக்கி திரையரங்கிலும் அஜித் கட்டவுட்க்கு பீர் அபிஷேகம் செய்தனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!