“3-வது குழந்தைக்கும் அரசு பெண் ஊழியருக்கு 1 வருடம் சம்பளத்துடன் மகப்பேறு விடுப்பு” - அமைச்சர் சரத் அறிவிப்பு!
சட்டமன்றத்தில் நடைபெற்ற மனிதவள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, அரசுப் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய 1 ஆண்டு மகப்பேறு விடுப்பு விரிவுபடுத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் டி. சரத்குமார் வெளியிட்டார்.
அரசுப் பணிகளில் உள்ள பெண் ஊழியர்கள் 3-வது குழந்தை பெற்றுக் கொள்ளும் போதும், அவர்களுக்கு 365 நாட்கள் (1 வருடம்) முழு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு உதவும் வகையில், ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் 'வெற்றிப்பாதை' என்ற சிறப்புச் செயலி உருவாக்கப்படும்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு கூடுதல் இடவசதி அளிக்கும் வகையில், ரூ.12.5 கோடி செலவில் புதிய இணைப்புச் செயலகக் கட்டடங்கள் கட்டப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.