கணித ஆசிரியை, 8 மாணவர்களை சுட்டுக்கொன்ற மாணவன்... தன்னையும் சுட்டுக்கொண்டு தற்கொலை - துருக்கியில் அதிர்ச்சி!

 

துருக்கி நாட்டின் கஹ்ராமன்மராஸ் மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இது துருக்கி வரலாற்றில் மிக மோசமான பள்ளித் தாக்குதல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

14 வயதுடைய இசா அராஸ் மெர்சின்லி என்ற 8-ஆம் வகுப்பு மாணவன் அதே பள்ளியில் பயின்று வந்தவர். ஓய்வுபெற்ற காவல் அதிகாரியான தனது தந்தையின் பையிலிருந்த 5 கைத்துப்பாக்கிகள் மற்றும் 7 தோட்டாக்கள் அடங்கிய மேகசின்களைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்.

ஒரு கணித ஆசிரியர் (அய்லா கரா) மற்றும் 8 மாணவர்கள் என மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். தாக்குதலுக்குப் பின் அந்த மாணவனும் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்தான். 13 பேர் காயமடைந்துள்ளனர், அவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

அந்த மாணவனின் வாட்ஸ்அப் சுயவிவரப் படம், அமெரிக்காவின் பிரபல 'இன்செல்' கொலையாளி எலியட் ரோஜரின் படமாக இருந்துள்ளது. மேலும், டிஸ்கார்ட் செயலியில் தனது திட்டங்கள் குறித்த ஒரு 'மேனிஃபெஸ்டோ' படத்தையும் அவர் பகிர்ந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முந்தைய நாள் சன்லியுர்பா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியிலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு 16 பேர் காயமடைந்தனர். இரண்டு நாட்களில் நடந்த இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.

முறையான பாதுகாப்பு இன்றி துப்பாக்கிகளை வைத்திருந்ததாக அந்த மாணவனின் தந்தை உகுர் மெர்சின்லி ( போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

துருக்கி போன்ற துப்பாக்கிச் சட்டங்கள் கடுமையான நாடாவிலேயே இத்தகைய சம்பவங்கள் நடப்பது அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டு அதிபர் எர்டோகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.