மிரள வைத்த திருமணப் பரிசு: 2 மணமகன்களுக்குத் தலா ரூ.1 கோடி மதிப்பிலான பணமாலை... வைரல் வீடியோ!
உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் நாக்லா போண்டா கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் மற்றும் கன்ஹா ராகவ் ஆகிய இரு சகோதரர்களுக்கு ஒரே நாளில் திருமணம் நடைபெற்றது. இதில் இரு மணமகன்களுக்கும் தலா ரூ.1 கோடி மதிப்பிலான பணமாலைகள் அணிவிக்கப்பட்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 21-ஆம் தேதி திருமண ஊர்வலத்தின்போது, இவர்களின் அக்கா கணவரான யோகேஷ் குமார் மைத்துனர்களுக்கு வித்தியாசமான பரிசு வழங்க முடிவு செய்தார். இதற்காக ரூ.500 நோட்டுக் கட்டுகளைக் கொண்டு சுமார் 100 அடி நீளத்தில் பிரம்மாண்டமான இரண்டு பணமாலைகள் தயாரிக்கப்பட்டன.
மொத்தம் ரூ.2 கோடி மதிப்பிலான இந்த மாலைகள் அதிக எடையுடன் இருந்ததால், மணமகன்கள் இருவரும் வீட்டின் மாடியில் நிற்க, மாலைகள் அணிவிக்கப்பட்டன. வீட்டு மாடியில் இருந்து தெரு வரை நீண்டிருந்த மாலைகளை உறவினர்கள் பலர் சேர்ந்து தாங்கிப் பிடித்தனர்.தெரு வரை நீண்ட பணமாலைகளைக் கண்ட உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர்