அசத்தல் சாதனை... 51 வயதில் எம்.பி.பி.எஸ் சீட்... !
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 51 வயது பூர்த்தி செய்திருக்கும் சுரேஷ்குமார் என்பவர் எம்.பி.பி.எஸ். சீட்டை தட்டிப் பறித்து இளைஞர் பட்டாளத்துடன் படிப்பில் போட்டி போட தயாராகியிருக்கிறார். சாதிக்க வயது ஒரு தடையில்லை என்பதற்கு சுரேஷ்குமார் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக மாறியுள்ளார். தமிழ் வழியில் நீட் தேர்வு பள்ளிப்படிப்பை முடித்து மருத்துவ படிப்பை படிக்க ஆசைப்பட்ட சுரேஷ்குமாருக்கு அப்போது அது சாத்தியப்படவில்லை.
இந்த நிலையில் 2022ம் ஆண்டு மருத்துவப் படிப்பு ஆசை மீண்டும் பொறித்தட்ட நீட் தேர்வை தமிழ் வழியில் எழுதினார் ஆனால் அதில் அவரால் சாதிக்க முடியவில்லை. இதையடுத்து கடந்த ஆண்டு மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் தாயும், மகளும் சேர்ந்து மருத்துவ இடங்களை தேர்வு செய்த செய்தி அவருக்கு மேலும் உந்துதலை கொடுத்தது. மாற்றுத்திறனாளிகள் பிரிவில் மருத்துவ படிப்பு கலந்தாய்வு அதன் அடிப்படையில் இரண்டாயிரத்து இருபத்தி ஆறாம் ஆண்டு நீட் தேர்வை எழுதி நூற்று தொண்ணூற்று இரண்டு மதிப்பெண் எடுத்திருந்தார்.
இராயயிரத்து பத்தொன்பதில் நடந்த விபத்தில் அவருக்கு ஏற்பட்ட காயத்தை சுட்டிக்காட்டி மாற்றுத்திறனாளிகள் பிரிவில், நேற்று நடந்த கலந்தாய்வில் பங்கேற்று நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பை தேர்வு செய்துள்ளார். ரத்த பரிசோதனை மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றி வந்த நான் என்னுடைய வேலையை உதறிவிட்டு படிப்பை தொடர போகிறேன் என்றும் சொந்த ஊரில் உள்ள கல்லூரியிலேயே படித்து நிச்சயம் மருத்துவப் படிப்பை நிறைவு செய்து டாக்டராக வலம் வருவேன் என்றும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.