வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை - அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!
தமிழகத்தில் வரவிருக்கும் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்கூட்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களின் சார்பில் உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிட்கோ ஃபின்டெக் சிட்டியில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களுக்கான பொறுப்பு அமைச்சரான விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில் இக்கூட்டம் கூட்டப்பட்டது. இதில் அமைச்சர்கள் ப.வெங்கடரமணன் மற்றும் ரா.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தொடர்புடைய துறைகளின் உயர் அதிகாரிகள், அரசு அலுவலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டு கள நிலவரங்கள் குறித்து விவாதித்தனர்.
பருவமழை காலத்தில் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் நீர் வடிகால் பணிகள், நிவாரண முகாம்கள் மற்றும் அவசரகால பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்கூட்டியே திட்டமிட்டுச் செயல்படுத்துவது குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.