ஆண்கள் திருவிழா !!! 3000கிடாக்கள் பலியிடப்பட்டு குழி தோண்டி புதைக்கும் விநோதம்!!

 

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே, விராலிப்பட்டி கோட்டை கருப்பணசாமி கோயிலில் 3000 கிடாக்கள் பலியிடப்பட்டன. அவை உடனே சமைக்கப்பட்டு ஆயிரக்கணகான பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. ஆகஸ்ட் 18ம் தேதி ஆடி கடைசி வெள்ளி இரவு திருவிழா கோலாகலமாக திருவிழா நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த திருவிழாவில்  பெண்களுக்கு அனுமதி கிடையாது.

நள்ளிரவு கோட்டை கருப்பணசாமிக்கு காவு கொடுக்கும் நிகழ்ச்சியில் 3000 கிடாக்கள் காணிக்கையாக வழங்கப்பட்டன. காணிக்கை வாங்கிய  3000  கிடாக்கள் பலியிடப்பட்டன. அவை சமைக்கப்பட்டு, உடனடியாக ஆயிரக்கணக்கான ஆண் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன

. சூரியன் உதிப்பதற்கு முன், மீதமிருந்த கிடாக்கறி ஜேசிபி இயந்திரம் மூலம் பெரிய குழி தோண்டி புதைக்கப்பட்டது. விராலிப்பட்டியில் நடைபெற்ற விழாவுக்காக, வத்தலகுண்டில் இருந்து அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இரவு முழுவதும் இயக்கியது குறிப்பிடத்தக்கது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!