புதிய சாதனை ... 8 ஆண்டுகளாக பயணித்து புதனை நெருங்கிய பெபிகொலம்போ விண்கலம்!
Sep 5, 2026, 19:00 IST
சூரிய குடும்பத்தின் புதன் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக ஐரோப்பிய மற்றும் ஜப்பான் விண்வெளி முகமைகள் இணைந்து அனுப்பிய ‘பெபிகொலம்போ’ விண்கலம் தனது இறுதிக்கட்ட இலக்கை வெற்றிகரமாக அடைந்துள்ளது.
சுமார் எட்டு ஆண்டுகள் விண்வெளியில் பயணித்து 1,000 கோடி கிலோமீட்டர் தூரத்தைக் கடந்த இந்த விண்கலத்தின் முக்கிய தொகுதியிலிருந்து அறிவியல் ஆய்வு சாதனங்கள் வெற்றிகரமாகப் பிரிந்து புதனை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியுள்ளன.
வரலாற்றில் முதல்முறையாக இருவேறு அறிவியல் விண்கலங்கள் ஒரே நேரத்தில் புதன் கிரகத்தைச் சுற்றி வந்து ஆய்வு செய்ய உள்ள நிலையில், வரும் நவம்பர் மாதம் அதன் சுற்றுப்பாதையில் நுழைந்து பல்வேறு மர்மங்களை வெளிக்கொண்டு வரும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.