என் பேரன் முதலமைச்சர் விஜய்யை பாக்க முடியல... சிட்டுக்குருவி பாட்டி நெகிழ்ச்சி!
மதுரைக்கு நலத்திட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்த முதல்வர் விஜய்யை நேரில் சந்திக்க முடியாதது குறித்து ‘மெர்சல்’ திரைப்படத்தில் நடித்த ‘சிட்டுக்குருவி பாட்டி’ சீனியம்மாள் உருக்கமாக பேசியுள்ளார்.மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் விஜய் நேற்று வந்திருந்தார். அவரது வருகையையொட்டி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு இடங்களில் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிலையில், விஜய்யை நேரில் சந்திக்க வேண்டும் என்ற தனது ஆசை நிறைவேறவில்லை என்று நடிகை சீனியம்மாள் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோவில் அவர், விஜய் முதலமைச்சராக இருப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், அவரை எப்படியாவது நேரில் சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும், ஆனால் இந்த முறை அது முடியாமல் போய்விட்டதாகவும் வருத்தத்துடன் பேசியுள்ளார்.
அடுத்த முறை விஜய்யை கண்டிப்பாக நேரில் சந்திப்பேன் என்றும் சீனியம்மாள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.‘மெர்சல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சிட்டுக்குருவி’ பாடல் காட்சியில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சீனியம்மாள். இதனால் அவர் ரசிகர்களால் ‘சிட்டுக்குருவி பாட்டி’ என்று அன்புடன் அழைக்கப்பட்டு வருகிறார்.விஜய்யை சந்திக்க முடியாதது குறித்து அவர் வெளியிட்டுள்ள இந்த உருக்கமான பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.