போலி செய்திகளை உடனடியா தடுத்து நிறுத்துங்க... மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடுமையான உத்தரவு!
மத்திய அரசுடன் நடந்த தொழில்நுட்பப் பேச்சுவார்த்தையில் மெட்டா அல்காரிதத்தில் குறைபாடு இருப்பது உறுதி செய்யப்பட்டது. மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தனது தளங்களில் உள்ள போலி பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற செயலிகளில் உள்ள விதிமீறல்கள் குறித்து மத்திய அரசு தொடர்ந்து நோட்டீஸ் வழங்கி வந்தது.
இந்தியாவில் செயல்படும் அனைத்து டிஜிட்டல் தளங்களும் இந்திய சட்டங்களுக்கு முழுமையாக இணங்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியது. குறைபாடுகளைச் சரிசெய்ய விரிவான செயல் திட்டத்தை சமர்ப்பிக்குமாறும் மெட்டா நிறுவனத்திற்கு அரசு சார்பில் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போலி பதிவுகளைக் கண்டறிந்து அகற்றும் செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக அரசுடன் இன்னும் நெருக்கமாகப் பணியாற்றவும் அறிவுறுத்தப்பட்டது. போலி பதிவுகளை வெளியிடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறும் அந்நிறுவனத்தை மத்திய அரசு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.