மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு... சம்பா சாகுபடிக்கு கூடுதல் நீர்!
Sep 8, 2026, 06:41 IST
டெல்டா மாவட்டங்களின் சம்பா சாகுபடித் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக உயர்த்தப்பட்டு, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 12,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 92.39 அடியாகவும், நீர் இருப்பு 55.35 டி.எம்.சி.யாகவும் பதிவாகியுள்ளது.
அணையில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ளதன் மூலம் டெல்டா பாசனப் பகுதியிலுள்ள விவசாயிகளின் சாகுபடித் தேவைகள் தடையின்றிப் பூர்த்தியாகும் என்பதால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.