கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் அருண்ராஜ் நேரில் ஆய்வு!

 

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் அருண்ராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள மருத்துவ வசதிகள் மற்றும் தூய்மைப் பணிகளைப் பார்வையிட்டார்.

மருத்துவமனையின் பல்வேறு சிகிச்சை பிரிவுகள் மற்றும் கழிவறைகளைப் பார்வையிட்ட அமைச்சர் அருண்ராஜ், அவற்றை எப்போதும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் மருத்துவமனையில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர், மருத்துவமனை முதல்வர் மற்றும் மருத்துவர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆய்வின்போது, கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் முகுந்தன் மற்றும் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.