அமைச்சர் கீர்த்தனா லிங்க்ட்இன் மூலம் முக்கிய அறிவிப்பு!

 

தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் எஸ்.கீர்த்தனா, மாநிலத்தின் 'தொழில் கொள்கை 2.0'-வை உருவாக்கும் நோக்கில் 'லிங்க்ட்-இன்' சமூக வலைதளம் மூலமாகப் பொதுமக்களிடம் நேரடியாகக் கருத்துகளைக் கோரியுள்ளார்.

புதுமையான இந்த முயற்சியின் கீழ், தொழில் முனைவோர்கள், முதலீட்டாளர்கள், நிறுவன உரிமையாளர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் தொழில் கொள்கை 2.0 குறித்த யோசனைகளையும் ஆலோசனைகளையும் அமைச்சர் கேட்டறிந்துள்ளார்.

இந்த நவீன அணுகுமுறையானது தமிழ்நாட்டிற்கு ரூ.1 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்கும் இலக்கை விரைவாக அடையப் பெரிதும் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி இளைஞர்களுடன் உரையாடச் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி வரும் சூழலில், தொழில்முறை சார்ந்த லிங்க்ட்-இன் தளத்தைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்து, கொள்கை உருவாக்கத்தில் துறை சார்ந்த வல்லுநர்களை நேரடியாக இணைத்திருப்பது ஒரு முன்னோடி முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.