அமைச்சர் மரிய வில்சன் நீதிமன்றத்தில் ஆஜர் - வழக்கு ஆவணங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டன!
Sep 4, 2026, 11:24 IST
புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் தமிழ்நாடு நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று நேரில் ஆஜரானார்.
தனது சகோதரரைத் தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக அமைச்சர் மரிய வில்சன் இன்று புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின் நகலைப் பெறுவதற்காக அவர் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். இது தொடர்பான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதியன்று தனது சகோதரர் மரிய கிளோத் மற்றும் அவரது மனைதியை அமைச்சர் மரிய வில்சன் தாக்கியதாகக் கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.