தவெக எம்.எல்.ஏ மனைவி மறைவு: அமைச்சர் என்.ஆனந்த் நேரில் அஞ்சலி!
கும்மிடிப்பூண்டி தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமாரின் மனைவி சர்மிளா (42) திடீர் உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார். அவரது மறைவு தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த சர்மிளாவின் உடல் அஞ்சலிக்காகக் கும்மிடிப்பூண்டியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது.
தகவல் அறிந்ததும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் N.ஆனந்த், விஜயகுமாரின் இல்லத்திற்கு நேரில் சென்று சர்மிளாவின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். மனைவியின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்திருந்த தவெக எம்.எல்.ஏ விஜயகுமாரை ஆரத்தழுவித் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டார். சர்மிளாவின் எதிர்பாராத திடீர் மறைவு தவெக குடும்பத்தில் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கட்சியின் பல்வேறு முக்கிய தலைவர்களும், தொண்டர்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் நேரில் சென்றும் எம்.எல்.ஏ விஜயகுமாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.