கட்டட அனுமதிக்கான சதுரடி வரம்பு உயர்வு - அமைச்சர் ப.ராஜ்குமார் அறிவிப்பு!
Aug 28, 2026, 13:54 IST
சுய சான்றிதழ் மூலம் உடனடியாகக் கட்டட அனுமதி பெறும் குடியிருப்பு கட்டடங்களின் பரப்பளவு வரம்பை உயர்த்தி வீட்டுவசதித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சுய சான்றிதழ் அடிப்படையில் உடனடியாகக் கட்டட அனுமதி பெறும் குடியிருப்பு கட்டடங்களின் பரப்பளவு வரம்பு, தற்பொழுதுள்ள 3,500 சதுர அடியிலிருந்து 5,000 சதுர அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
தரை தளம் மற்றும் 2 தளங்கள் மற்றும் ஸ்டில்ட் பிளஸ் 3 தளங்கள் வரையிலான குடியிருப்புகளுக்கு இந்த புதிய தளர்வு உடனடியாகப் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.