தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் - அமைச்சர் ராஜ்மோகன் சட்டப்பேரவையில் அறிவிப்பு!

 

சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களின் முக்கிய கோரிக்கைகள் குறித்து அமைச்சர் ராஜ்மோகன் சட்டப்பேரவையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

தூய்மைப் பணியாளர்களின் வருகையைப் பதிவு செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த மின்னணு வருகைப் பதிவு முறை உடனடியாக நீக்கப்படுவதாக அமைச்சர் அறிவித்துள்ளார். இனி வழக்கம்போல பழைய முறைப்படி வருகைப் பதிவேடு முறையே பின்பற்றப்படும்.

தூய்மைப் பணியாளர்களுக்கு வேலை நேரத்தில் காலையில் வழங்கப்பட்டு வரும் சிற்றுண்டிக்கு மாற்றாக, அதற்கு இணையான உணவுப்படி நேரடியாக வழங்கும் கோப்பு அரசின் பரிசீலனையில் உள்ளது. இது குறித்த அறிவிப்பும் விரைவில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.