undefined

 அரசுப்பள்ளியில் அவலம்... 2 கிமீ சைக்கிளில் சென்று தண்ணீர் எடுத்து வந்த மாணவர்கள்!  

 

தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மாரம்பாடியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 6 முதல் 10 ம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில்,  பள்ளியில் உணவு சமைக்க தண்ணீர் இல்லாததால் பள்ளியில் பயிலும் மாணவர்களை 2 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் சென்று தண்ணீர் எடுத்து வரும்படி பள்ளி தலைமை ஆசிரியர் கூறினார்.  

இதையடுத்து சைக்கிளில் சென்ற மாணவர்கள் ஒவ்வொருவரும் 2 குடங்களில் தண்ணீரை எடுத்துக் கொண்டு பள்ளிக்கு இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், சைக்கிளில் தண்ணீர் எடுத்து வந்த மாணவர் ஒருவர் கீழே விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. பள்ளிக்கு கல்வி பயில வரும் மாணவர்களை தண்ணீர் எடுத்துவரச் சொன்ன ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


தண்ணீர் எடுக்கச் செல்லும் மாணவர்களும் அசம்பாவிதம் நேர்ந்தால் உயிருக்கு யார் பாதுகாப்பு கொடுப்பார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.  உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.  இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா ”பள்ளியில் மோட்டார் இயங்காததால் பள்ளி மாணவர்கள் குடிப்பதற்காக தண்ணீர் எடுத்து வந்துள்ளனர் என பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார், மேலும், முழு விளக்கத்தையும் தாக்கல் செய்ய தலைமை ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!